Tuesday, October 08, 2013
இலங்கை::இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையானது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு நியாயமான வகையில் அமையவேண்டும் என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த கருத்தை வெளியிட்டார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானதுடன் கலந்துரையாடவேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் ஊடாக சிறந்த முன்னெற்றத்தை கண்டுள்ளோம் என்று கூறமுடியும். எனவே, அடுத்த கட்டமாக இரண்டு நாடுகளினதும் மீனவத் தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்த வேண்டும். இதன்படி இருதரப்பிற்கும் நியாயமான வகையிலான இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.
அதேபோன்று இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையை தொடர்ந்தும் கலந்துரையாடல் மூலம் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்பொருட்டு இலங்கை அரசாங்கம் பல கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மீனவர் பிரச்னை குறித்து இலங்கை அதிபருடன் குர்ஷித் ஆலோசனை!
இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று காலை கொழும்பில் சந்தித்து பேசினார். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து அவரிடம் குர்ஷித் விவாதித்தார். தலைநகர் கொழும்பில் நேற்று அவர் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் பெரீசை சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பில் அதிபர் ராஜபக்சேவை அவரது இல்லத்தில் குர்ஷித் சந்தித்து பேசினார்.
அப்போது இலங்கை அரசின் மின்சார துறை பெண் அமைச்சர் பவித்ரா, சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.சந்திப்பின் போது, இருநாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார உறவு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜபக்சேவும், குர்ஷித்தும் விவாதித்தனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளையும் அழைத்து பேசுவது பற்றியும் அவர்கள் விவாதித்தனர். பின்னர், குர்ஷித்துக்கு ராஜபக்சே விருந்து அளித்தார். இதன்பின், காலை 10.30 மணிக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயை சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை பெற்று தருவது பற்றி அவருடன் விவாதித்தார்.
சந்திப்புக்கு பின்னர், காலை 11 மணியளவில் குர்ஷித் அங்கிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றார். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விக்னேஸ்வரனை பிற்பகல் 3.30 மணியளவில் குர்ஷித் சந்திக்கவுள்ளார்
பின்னர், தமிழர்களுக்கு தெல்லிப்பாளை பகுதியில் இந்திய அரசு நிதியுதவியில் கட்டப்படும் வீடுகளை குர்ஷித் பார்வையிட்டு, அங்குள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்கவுள்ளார். தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்றிரவே குர்ஷித் விமானத்தில் டெல்லி திரும்புகிறார். -

No comments:
Post a Comment