Sunday, October 20, 2013
இலங்கை::வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முயற்சியை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களும் கிழக்கு மக்களும் இணைந்து இரு மாகாணங்களையும் இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கருத்தை பற்றி கூறும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :-கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் இணைந்திருந்த இருபது வருட காலம் என்பது கிழக்கு மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் இருண்ட காலமாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது. இத்தகைய நிலைக்கு புலிகள் மட்டுமல்ல மேலாதிக்க சிந்தனையுள்ள வடபகுதி அரச ஊழியர்களும் பிரதான காரணமாக இருந்தார்கள்.
இந்த யதார்த்த நிலையை கருத்திற்கொண்டு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான மாகாண நிர்வாக சபை ஒன்றை வழங்காமல் கிழக்கை வடக்குடன் இணைப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது.

No comments:
Post a Comment