Wednesday, October 09, 2013
இலங்கை::தேசத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கி வரும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் நிர்வாக இயந் திரத்தை சீராக செயற்படுத்தி மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைக்கும் அதி உன்னத நோக்கத்துடன் மத்திய அரசாங் கமும், மாகாண நிர்வாகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற் கான புதிய யோசனையை ஒன்றை முன்வைத்துள்ளார்.
வட மாகாணத்தின் முதலமைச்சராக தனது முன்னிலையில் சி.வி.விக் னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தி லேயே ஜனாதிபதி இந்தத் திட்டம் பற்றி தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டங்களின் போது மாதந்தோறும் கலந்து கொள் ளுமாறு 9 மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்புவிடு க்க இருப்பதாகவும் இதன் மூலம் மாகாண முதலமைச்சர்கள் தத் தமது மாகாணங்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொள்வது இலகுவாக இருக்குமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபை நிர் வாகங்களும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமி ருக்கும் நிலையில், வடமாகாணசபை நிர்வாகம் எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வட மாகாணத்தின் முதலமைச்சருக்கும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி அவர்களின் இந்த யோசனை மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண நிர்வாகங்களுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் ஏற்படுவதை தவிர்ப்பதுடன் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு பேருதவியாக அமையுமென்று அரசியல் அவதானி கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளையில் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வெற்றிகரமாக நடந்து முடி ந்த வடமாகாணசபைத் தேர்தல் வடபகுதி மக்களின் சிறந்த எதிர் காலத்திற்கு புதிய ஆரம்பமாக அமையுமென்றும் விரைவில் அர சியல் தீர்வொன்றையும், தேசிய நல்லிணக்கப்பாட்டையும் யதார்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வின் மூலம் ஏற்படுத்தி இலங்கை தமிழ் சமூகம் உட்பட இந்நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் நீதியான, கெளரவமான, மதிப்பிற்குரிய மற்றும் சுயகெளரவத்துடனான வாழ் க்கையை நடத்துவதற்கு இந்தியா உதவுமென்றும் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களும் வடமாகாணசபையின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்குமென்றும் முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி சமாதானத்தையும், அமை தியையும் ஏற்படுத்தியிருக்கும் ஜனாதிபதி அவர்கள், தேசிய பொரு ளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதே வேளையில் நாடெங்கி லும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும் அதே வேகத்தில் செய ற்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். ஜனா திபதி அவர்களின் இந்த எண்ணம் சரியான முறையில் நடை முறைப்படுத்தப்படுவதற்கு நாட்டில் நல்லிணக்கப்பாடும் இனங்களி டையே ஒற்றுமையும் ஏற்படுவது அவசியம். வடமாகாண சபையில் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வடமாகாணத்தை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது என்பதை அரசாங்கத்திற்கு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்க செயலாகும்.
இதேவேளையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உள் ளக சுயநிர்ணய உரிமை நாட்டை பிளவுபடுத்தாது என்பதை எங்க ளது சிங்கள சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டுமெ ன்றும், அவர்கள் இந்த யதார்த்தபூர்வமான உண்மையை அரசியல் வாதிகளுக்கு எடுத்துரைத்து நாட்டை சகல இன மக்களும் ஒன்றி ணைந்து கட்டியெழுப்புவதற்காக சுமுகமான சூழ்நிலையை உருவா க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவருக்கு மரத்தினாலான அழகிய விநாயகர் சிலையொன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

No comments:
Post a Comment