Pages

Monday, October 28, 2013

தொலைபேசி ஒட்டுக்கேட்டல் சர்ச்சை உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படக் கூடும்: வாசுதேவ நாணயக்கார!

Monday, October 28, 2013
இலங்கை::உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படக் கூடுமென இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்டல் சர்ச்சை அமெரிக்காவின் நேச நாடுகளை ஆத்திரமடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நட்பு நாடுகளின் அரச தலைவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெர்மனி, பிரேஸில் போன்ற நாடுகளின் தலைவர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் நிலைமை அமெரிக்காவின் சர்வதேச உறவுகளுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டுமென சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக விரோதமானது மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொலைபேசி ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர மத்திய நிலையத்தின் தலைவர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

ஏதேனும் காரணத்திற்காக தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என்ற போதிலும் அதனை எற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment