Thursday, October 10, 2013
இலங்கை::வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த மேற்படி அமைச்சரவைத் தெரிவு, தற்போது இறுதியான தீர்மானத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் கல்வி அமைச்சராக தம்பிராஜா குருகுலராஜா, சுகாதார அமைச்சராக பத்மநாதன் சத்தியலிங்கம், விவசாய அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், உள்ளூராட்சி அமைச்சராக பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவைத் தலைவராக கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவராக அன்ரனி ஜெகநாதன் ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment