Tuesday, October 08, 2013
இலங்கை::இலங்கையின் ஒற்றுமை, இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய ஆரம்பமொன்றை ஏற்படுத்துவதற்கு, அண்மையில் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தல் அடித்தளமாக அமையுமெனவும் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று காலை இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய முக்கிய விடயம் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். ஏனெனில் இதன்மூலம் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியுமென நம்புகின்றோம். இரண்டு நாடுகளினதும் மீனவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்கச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.,,
உத்தேச சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாண பணிகளுக்கான ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்தியுள்ளன.
இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையே கைச்சாத்தான உடன்படிக்கையின்படி, இந்த நிலையத்தின் ஊடாக மேலதிகமாக 500 மெகா வட் மின் உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, மின் சக்தித்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன் பின்னர் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், வெளிவிவகார துறை அமைச்சர் ஜி.எல். பீரிசும் இணைந்து செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்கள்
அரசியல் அமைப்பிற்கு அமையவும், பொதுமக்களின் விருப்பத்திற்கு அமையவும் அதிகார பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பேச்சுவார்தைகள் மூலம் ஜனநாயக முறையிலான தீர்வினை காணவேண்டும். இதன் மூலம் இருதரப்புக் கருத்துக்கள் பறிமாறுவதன் ஊடாக சிறந்த தீர்வை பெறலாம் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
தற்போது வடமாகாணத்தில் ஜனநாயக ரீதியிலான அரசியல் அமைப்பொன்று உருவாகியுள்ளது.
அவர்கள் மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட்டு தமது குறைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் என்பதுடன், சகல தரப்பினரின் அபிலாஷைகள் அரசியல் யாப்பிற்கு அமைய பேணப்படும் என விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்தியப் பிரதமரே முடிவு செய்வார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வது குறித்து இந்தியப் பிரதமரே முடிவு செய்வார். இருந்தபோதிலும், இந்தியவெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தான் அதில் கலந்துகொள்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வடக்கிற்கு இன்று விஜயம் செய்யவிருப்பதுடன் வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் மற்றும் ரயில் பாதை அமைப்புத் திட்டம் ஆகியவற்றை தான் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..

அதிகாரப்பகிர்வு தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா கோரியுள்ளது.
புதிதாக ஆட்சி அமைத்துள்ள வட மாகாணசபை அரசாங்கம், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்களில் இந்தியா தீர்மானங்களை எடுக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் மீனவர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பிச்சினைகளை தீர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்..
நேற்று பிற்பகல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இந்தியாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும் அபிவிருத்தி பணிகள் பற்றியும் இரு நாட்டு அமைச்சர்களும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த சந்தப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், வட மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவின் செயலாளர் எஸ்.பி. திவாரட்ண உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்..
தமிழக இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். , தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகவும், இதை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யாழ்ப்பாணத்தில் இன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சல்மான் குர்ஷித் சந்திக்கிறார்.

No comments:
Post a Comment