Pages

Saturday, October 12, 2013

இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சி: இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க!

Saturday, October 12, 2013
இலங்கை::இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக இலங்கை இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில நபர்களும் சில அமைப்புக்களும் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இராணுவத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சித்து வருகின்றனர்.
எனவே இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமாயின் படையினர் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் சமயோசிதத்துடனும், புத்தி சாதுரியத்துடனும் படையினர் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய நோக்கத்துடன் இவ்வாறான சக்திகளுக்கு எதிராக செயற்பட்டால் இராணுவத்தையும், தனிப்பட்ட ரீதியிலும் பாதிப்புக்கள் ஏற்படும்.
எனவே இராணுவத்தினர் ஒழுக்கமுடையவர்கள் என்பதனை உலகிற்கு உணர்த்துவதே மிகவும் முக்கியமான கடமையாகும்.

யுத்த காலத்தில் வழங்கியதனைப் போன்றே அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் தற்போதும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment