Pages

Monday, October 14, 2013

தம்பலகாம நீர்ப்பாசனத் திட்டங்கள் பொது மக்களிடம் கையளிப்பு!

Monday, October,14, 2013
இலங்கை::தம்பலகாமம் பிரதேச சபைப் பிரிவில் ஜெயிக்கா திட்டத்தினூடாக கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்டுள்ள கல்மெட்டியாவ கிளிக்குஞ்சாறு, பரவிபாஞ்சான், ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோரினால் மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமான் லெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2013-10-12ந் திகதி இடம்பெற்றது.
 
குறிப்பிட்ட திட்டங்களில் 7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கல்மெட்டியாவ கிளிக்குஞ்சாறு அணைக்கட்டின் மூலம் 980 ஏக்கர் வயல் நிலக் காணிகளும் 6.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பரவிபாஞ்சான் அணைக்கட்டின் மூலம் 422 ஏக்கர் வயல் நிலக் காணிகளும் இரு போகமும் செய்கை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
பரவிபாஞ்சான் மற்றும் கல்மெட்டியாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான், மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத் துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.திலகராஜா, தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment