Pages

Monday, October 7, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் வடமாகாண அமைச்சர்களின் தெரிவின் பொருட்டு பிளவு ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன!

Monday, October, 07 ,2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் வடமாகாண அமைச்சர்களின் தெரிவின் பொருட்டு பிளவு ஏற்பட்டிருப்பதாக  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடமாகாணசபைக்கான முதலமைச்சர் நாளைய தினம் சத்தியபிரமாணம் செய்துக் கொள்கின்ற போதும், இன்னும் அந்த மாகாணத்துக்கான அமைச்சர்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் நேற்றுய தினம் இடம்பெற்ற தொடர் சந்திப்பின் போது, வடமாகாண முதலமைச்சரின் சத்தியபிரமாணத்தின் பின்னர், வடமாகாணஅமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு இடையில் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்துக் கொள்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையே இந்த தாமதத்துக்கான காரணம்என்று தெரிவிக்கப்படுகிறது..
 
புலிகளின் வெளிப்படையான ஆசீர்வாதத்துடன் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது. தற்போது அனைத்துத் தேர்தல்களிலும் புலிகளின் ஆதரவாளர்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கே தமது ஆதரவை வழங்கி வருகின்றார்கள். அவர்கள் கை காட்டினார்கள் என்பதற்காக சரத் பொன்சேகாவுக்குக் கூட தமது வாக்குகளை அழித்திருந்தார்கள்.
 
புலிகளின் கை ஓங்கி இருந்த காலங்களில் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் பெரிதாக வெளித் தெரியவில்லை. கூட்டமைப்பின் அநேகமான முடிவுகள்  புலிகளால் எடுக்கப்பட்ட நிலையிலும், உத்தரவுகளைப் பின்பற்றும் நடைமுறையே பெரும்பாலும் இருந்தது.

No comments:

Post a Comment