Saturday, October 5, 2013

சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

Saturday, October 05, 2013
இலங்கை::வட மாகாண முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
நேற்று பகல் பம்பலப்பிட்டியில் நடைபெற்ற விசேட கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.
 
எதிர்வரும் திங்கட்கிழமை
முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்பு நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
வட மாகாண சபையின் அமைச்சரவை எதிர்வரும் 11 ஆம் திகதி புதிய முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா, சம்பந்தன் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
இதேவேளை, வடமாகாண அமைச்சர்களுக்கான பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் சி.வி. சிக்கினேஸ்வரன் முன்னிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
 
ஜனா­தி­ப­தி­யுடன் நேற்று காலை நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து நேற்று முற்பகல் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபைக்கான முதலமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குப் பதிவிப்பிரமாணம் செய்துகொள்வார். கொழும்பில் அலரி மாளிகையில் இப்பதவியேற்பு வைபவம் இடம்பெறும்.

No comments:

Post a Comment