Tuesday, October 29, 2013
இலங்கை::இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகநபரிடமிருந்து 482 கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர் துபாயிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வங்கியொன்றில் போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட முயற்சித்த ஒருவர் கைது!
பூண்டலோயாவிலுள்ள அரச வங்கியொன்றில் போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பூண்டலோயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
70 இலட்சம் ரூபா போலி ரூபாய் நோட்டுக்களை அச்சிட்ட பிரதான சந்தேகநபரும் மற்றுமொருவரும் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியல்!
மாலம்பே பகுதியில் 70 இலட்சம் ரூபா போலி ரூபாய் நோட்டுக்களை அச்சிட்ட பிரதான சந்தேகநபரும் மற்றுமொருவரும் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்கேதநபர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 20 போலி ஆயிரம் ரூபா நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை பயன்படுத்தும் போது விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment