Sunday, October 20, 2013
இலங்கை::இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் தென்ஆப்பிரிக்காவின் கிரஹாம் போர்டு தனது ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை இலங்கை தீவிரமாக தொடங்கியுள்ளது. பயிற்சியாளரை நியமிப்பதற்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தாலும், அதில் ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் சேப்பல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
65 வயதான சேப்பல் 2005 முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். அப்போது கங்குலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுடன் கருத்து வேறுபாடு, 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா படுதோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளால் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேப்பலை தவிர இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புத், மொகித் சோனி, ஆஸ்திரேலியாவின் ஷேன் டப், மைக்கேல் ஓ சுலிவான், இங்கிலாந்தின் பால் பார்பிரேஸ், இயான் போன்ட், நியூசிலாந்தின் கிராண்ட் பிராட்பர்ன், உள்ளூர் முன்னாள் வீரர்கள் மார்வன் அட்டப்பட்டு, கலுவிதரனா ஆகியோரும் பயிற்சியாளருக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment