Pages

Sunday, October 6, 2013

நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

Sunday, October 06, 2013
பிரசெல்ஸ்::நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். பெல்ஜிய.ம் சென்றுள்ள அவர் யூரோ நியூஸ் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டி:
 
எல்லை தாண்டிபயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதனால்தான் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை உடனடியாக மூடுமாறு நாங்கள் கூறி வருகிறோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நாடற்றவர்கள் என்று பாகிஸ்தான் கூறுவது அர்த்தமற்றது. அந்த நாடற்றவர்கள் எனப்படுபவர்கள் ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதியிலிருந்துதான் வருகிறார்கள்.
 
2004_ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் யாரும் ஈடுபட தங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் காப்பாற்றவில்லை. 1971_ம் ஆண்டு இந்திராகாந்தி_ பூட்டோ இடையிலான சிம்லா ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி நல்லெண்ண அடிப்படையில் 81 ஆயிரம் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவுக்கு எல்லையை விரிவுபடுத்தும் ஆசையோ, தனது சித்தாந்தங்களை பிழறநாடுகளில் பரப்பும் எண்ணமோ கிடையாது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று
 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். 

No comments:

Post a Comment