இலங்கை::பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பருத்தித்துறை முனையிலிருந்து காலிமுகத்திடல் வரையென ஆரம்பமான விழிப்புணர்வூட்டும் வாகனப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.
இந்த வாகனப் பேரணியை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள பொது நூலகக் கட்டிடத்திற்கு முன்பாக நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில்; பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாகீர் மௌலானா, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணி;ப்பாளர் கே.தவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு பருத்தித்துறை முனையிலிருந்து காலிமுகத்திடல் வரையான வாகனப் பேரணி நேற்று சனிக்கிழமை திருகோணமலையை வந்தடைந்தது.

No comments:
Post a Comment