Pages

Monday, October 14, 2013

மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்கக்கூடும்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

Monday, October,14, 2013
சென்னை::2014ஆம் ஆண்டின் இந்திய பொதுத்தேர்தலை மையமாக கொண்டு தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை இந்திய பிரதமர் ஏற்கலாம் என்று தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது

இதன் அடிப்படையில் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்கக்கூடும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா மாத்திரமல்லாமல். திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதி மற்றும் உள்ளுர் காங்கிரஸ் தலைவர்களும் இலங்கை பயணத்தை கைவிடுமாறு மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

குறிப்பாக மத்திய அமைச்சில் அங்கம் வகிக்கும் ஜி கே வாசன், மற்றும் வி நாராயணசாமி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது

இந்தநிலையில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஸித் கொழும்பின் பொதுநலவாய அமர்வில் பங்கேற்பார் என்று டைம்ஸ் எதிர்வுகூறியுள்ளது

No comments:

Post a Comment