Wednesday, October, 16, 2013
இலங்கை::சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வருக்கும், பொலிஸ் அத்தியட்சகர்கள் ஐவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சட்டம் தொடர்பான அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன, பொலிஸ் பொது தொடர்பாடல் மற்றும் ஊடக இணைப்பு பிரிவின் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன, பண்டாரவளை பொலிஸ் பிரிவின் பிரதானியாக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜீவ மெதவத்த, தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.கே.பி மஹகெதர, அம்பாறை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊழல் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பெர்னான்டோ, மாத்தளை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment