Sunday, October 20, 2013

இலங்கையின் ஆடை மற்றும் பின்னல் தொழிற்துறை அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவியளிக்கும்!

Sunday, October 20, 2013
இலங்கை::இலங்கையின் ஆடை மற்றும் பின்னல் தொழிற்துறை அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சின் பிரதிநிதி யு ஜியான்ஹஷுவா இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் ஆடை உற்பத்திகள் மற்றும் பின்னல் வேலைப்பாடுகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில்- முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment