Saturday, October 12, 2013
இலங்கை:வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி
அவர்களிடமிருந்து நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வு ஆளுநர்
அலுவலகத்தில் 11 ஒக்ரோபர் 2013 அன்று இடம்பெற்றது.
இன்று மாலை மூன்று மணிக்கு வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட
மாகாண சபையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு வருகை
தந்தார்கள்.
சம்பிரதாய நிகழ்வுகளின் பின் வட மாகாண ஆளுநர் அமைச்சர்களின் நியமனக் கடிதங்களை
கையொப்பமிட்டு வழங்கினார்.
வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர்
திரு.இ.இளங்கோவன், மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில்
கலந்து கொண்டார்கள்.
அமைச்சர்களதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சுக்களினதும் விபரங்கள்.
1. கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன்:
நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, வீதி அபிவிருத்தி, மின்சக்தி,
வீடமைப்பு, நிர்மாணம், கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும்
புனர்வாழ்வளித்தல், தொழில்துறை, தொழில், முனைவோர் மேம்பாடு, சுற்றுலா, ஊள்ளுராட்சி
மற்றும் மாகாண நிர்வாகம், உணவு வழங்கலும் விநியோகமும் அமைச்சு.
2. பொன்னுத்துரை ஐங்கரநேசன்:
விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சு.
3. தம்பிராசா குருகுலராஜா:
கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சு.
4. பத்மநாதன் சத்தியலிங்கம்:
சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சு.
5. பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்:
மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி
அமைச்சு.











No comments:
Post a Comment