Pages

Tuesday, October 8, 2013

அதிகாரப் பகிர்வு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, October 08, 2013
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமூகமாக அமைந்திருந்தாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம், அரசியல் நடவடிக்கைகள், மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் வலயங்களுக்கு இடையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

13வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தமையால் இதற்கென விசேட செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செயற்குழுவின் மூலம் எட்டப்படும் இணக்கப்பாட்டை மக்களின் தீர்ப்பாகக் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டதாக மொஹான் சமரநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையிலேயே இடம்பெற்றுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பகிர்வு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இறுதித் தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சல்மான் குர்ஷித் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
 
இர நாடுகளினதும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
 
மக்களுக்கு எது தேவை என்பதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் கலந்தாலோசித்து காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது..
 
ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா ,வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ,இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம். , அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா ,பவித்ரா வன்னியாரச்சி ,வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment