புதுடில்லி::கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க, மத்திய அரசுக்கு
உத்தரவிடக்கோரி, தி.மு.க., தலைவர் (கரடி புலி) கருணாநிதி தொடர்ந்த வழக்கில், ஆறு வாரத்திற்குள்
பதிலளிக்க, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் வழங்கி உள்ளது.
தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பாக, இலங்கை - இந்தியா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம், அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இலங்கை அருகே மீன்பிடிக்க செல்லும், தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்கின்றனர். இதன் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கச்சத்தீவை, இலங்கையிடம் இருந்து மீட்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு, நேற்று நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. இந்த மனுவிற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'மத்திய அரசு ஆறு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். மத்திய அரசு பதிலளித்த பின், அடுத்த விசாரணை தொடரும்' என, உத்தரவிட்டனர்.


No comments:
Post a Comment