Pages

Monday, October 21, 2013

ஐக்கிய தேசியக் கட்சியன் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும்: ஐக்கிய பிக்குகள் முன்னணி!

Monday, October 21, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியன் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் மீட்டியாகொட குணரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதற்காக ஐக்கிய பிக்குகள் முன்னணி முன்வைத்த 8 அம்ச யோசனைத் திட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் வேறொரு யோசனைத் திட்டத்திற்கான எவ்வித தேவையும் இல்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறாயினும், தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பது தொடர்பிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் தமது சார்பில் முன்வைப்பதற்காக யோசனைத் திட்டமொன்றை தயாரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீமுக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டிருந்தன.
 

No comments:

Post a Comment