Pages

Sunday, October 27, 2013

என் தலைவர் பிரபாகரனே செத்திட்டார்; இனி பேசி பயனில்லை!': விஜயகாந்த்!

Sunday, October 27, 2013
சென்னை: "இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை, 9:10 மணிக்கு டில்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் விஜயகாந்த் அளித்த பேட்டி: தே.மு.தி.க., சார்பில் டில்லி பொதுக் கூட்டம் நடக்கிறது; அதில் பங்கேற்க செல்கிறேன். டில்லியில், காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசும் திட்டம் இல்லை.

காமன் வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்பது குறித்து, இலங்கைத் தூதர் பேசியது சரியல்ல. இந்தியாவை யாரும் தனிமைப்படுத்த முடியாது. காமன் வெல்த் மாநாட்டில், கனடா பங்கேற்க போவதில்லை என, அறிவித்துள்ளது. ஆனால், அந்நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

பிரிட்டன் நாட்டின் பிரதிநிதிகளும், இம்மாநாட்டில் பங்கேற்று, இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

என் தலைவர் பிரபாகரனே இறந்து விட்ட பிறகு, போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை. முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழகம், மின்மிகை மாநிலமாக இருக்கும்' என, தெரிவித்துள்ளார்.

சோறு சமைக்க இப்போது தான் உலை வைத்துள்ளனர். அரிசி வெந்துவிட்டதா என, இப்போதே எப்படி சொல்ல முடியும்? மழைக்காலம் முடிந்த பிறகு தான், முழு விவரம் தெரிய வரும்.

மினி பஸ் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில்களில், இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து, பத்திரிக்கையாளர்கள் தான் சொல்ல வேண்டும். அதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது. இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

No comments:

Post a Comment