Saturday, October 5, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: மத்திய அமைச்சர் நாரயணசுவாமி!

Saturday, October 05, 2013
சென்னை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
 
இந்தியா அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் 7ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குர்ஷித் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டும் நோக்கிலான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment