Sunday, October 20, 2013

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது: மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி!

Sunday, October 20, 2013
இலங்கை::விசேட அதிரடிப்படையினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இவ்வாறு விசேட அதிரடிப்படையினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.
 
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கள் உள்ளுர் குழுக்களுடன் இணைந்து செயற்படக் கூடிய சாத்தியம காணப்படுவதாக சட்டம் ஒழங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகள் நிலவிய உள்நாட்டு பயங்கரவாதத்தை விடவும், வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் கூட்டாக இணைந்து மேற்கொள்ளப்படக் கூடிய நாசவேலைகள் ஆபத்தானவை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். களுத்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரியான முறையில் துப்பாக்கிச் சூடு நடாத்த விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவும் எதிரியை இலக்கு வைக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் அச்சுறுத்தல்கள் முழுமையாக நீங்கவில்லை என நந்த மல்லவாரச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment