Monday, October 14, 2013

எந்த தரப்புக்கும் சார்பாக செயற்படவில்லை: பொதுநலவாய நாடகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா!

Monday, October,14, 2013
சென்னை::இலங்கை விடயத்தில் தாம் பக்க சார்பாக செயற்படவில்லை என்று, பொதுநலவாய நாடகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கமலேஷ் சர்மா தமது அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுவதாக கனடா குற்றம் சுமத்தி இருந்தது.

இந்த குற்றச்சாட்டு தம்மீது முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவர், தாம் எந்த தரப்புக்கும் சார்பாக செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment