Sunday, October 20, 2013
இலங்கை::அண்மையில் முதலமைச்சராக தெரிவு செய்யப் பட்ட சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சி மாகாணசபை உறுப்பினர்களால் விமர்சிக் கப்படுவதையிட்டு அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பெரும் கவலையடைகின்றனர். அதுமட்டு மல்ல பதவிக்காக தங்களிடையே மோதிக்கொள்ளும் நிலையை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து இவர்களா எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் தலைவர்கள் என்றும் விசனம் அடைந்துள்ளனர் என ஜனாதிபதியின் இந்து மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
பதவி மோகம் இல்லை என்று குறிப்பிடும் இவர்கள் அதனையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறார்கள். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் மாகாணசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து ஒற்றுமையின் சின்னத்துக்கு இழுக்கைச் சேர்த்துவிட்டார் கள் என மக்கள் அங்கலாய்ப்பதாகவும் பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களுக்காக கூட்டுச்சேர்ந்து பதவிக்காக பிரியும் இவர்கள் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமை மற்றும் உரிமையின் குரலாக ஒன்றுபடுவது என்பது ஐயமே. சம்பந்தன் ஐயாவின் கூட்டு பொறுப் புகளை வடபகுதியிலுள்ள மதகுரு ஒருவர் செய்யவேண்டிய நிலைக்கு அவர் பதவி மோகம் கொண்ட கட்சி தலைவர்கள் சிலரால் தள்ளப்பட்டுள்ளார் என்பதும் மன வருத்தப்பட வேண்டிய செயல் எனவும் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment