Pages

Tuesday, October 29, 2013

இலங்கையில இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதி!

Tuesday, October 29, 2013
புதுடெல்லி::இலங்கையில இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இதற்கு பலத்த எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவுக்கு முக்கியமானது என்பதனால், தாம் நிச்சயமாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக  இந்திய வெளிவிவகார அமைச்சர் கடந்த வாரயிறுதியில் அறிவித்திருந்தார்.
எனவே, இலங்கையுடன் இணைந்து செயற்படாத பட்சத்தில் தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றும் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரச நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் குறைந்த பட்சம் மீனவர் பிரச்சினைகளையேனும் தீர்த்துக்கொள்ள முடியுமா என்றும் அவர் தென்னிந்திய அரசியல் தரப்பினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனிடையே, வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராம்தாஸ் ஆட்சேபித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எட்டாத நிலையில், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தமது பங்களிப்பை எந்த ரீதியில் உறுதி செய்தார் என்று அவர் கேட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment