Pages

Saturday, October 5, 2013

வடமாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் மீண்டும் ஒன்று கூடுகிறது!

Saturday, October 05, 2013
இலங்கை::வடமாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் மீண்டும் ஒன்று கூடுகிறது.

இது தொடர்பில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்த போதும், இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிவில்லை.

எனினும் நேற்றைய கூட்டத்தின் போது, சி வி விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக எதிர்வரும் திங்கட் கிழமை முற்பகல் 9 மணியளவில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என்ற செய்தி உறுதியாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து வடமாகாண சபை அமைச்சரவைக்கான கட்சிகளின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் கே. சிவாஜிலிங்கம், தமிழரசு கட்சியின் சார்பில் மருத்துவர் சத்தியலிங்கம், குருகுலசிங்கம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பில் பெயர்கள் எவையும் பரிந்துரைக்கப்பட வில்லை.

தமது அமைப்புக்காக ஒதுக்கப்பட உள்ள அமைச்சு எது என்பதை வெளிப்படுத்திய பின்னர் அதற் குரியவர்களை தாம் பரிந்துரைப்பதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இது குறித்து இன்று மீண்டும் கலந்துரையாடப்படுகிறது.

No comments:

Post a Comment