Pages

Thursday, October 10, 2013

நாட்டில் காணப்படும் டிப்ளோமா, உயர் டிப்ளோமா ஒரு முறைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

Thursday, October 10, 2013
இலங்கை::நாட்டில் காணப்படும் டிப்ளோமா, உயர் டிப்ளோமா உள்ளிட்ட சில பாடநெறிகளின் தரத்தினை, ஒரு முறைமையின் கீழ் கொண்டுவருவதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்வியமைச்சு குறிப்பிடுகின்றது.
 
இதற்காக, சர்வதேச தரத்திற்கு
அமைய, தகைமைகள் சில நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
 
இதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியின் மூலம் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் பெறுபேறுகளை, உள்நாட்டு பல்கலைக்கழகமொன்றின் பாடநெறிக்கு வழங்கப்படும் தகுதிக்கு சமமாக கருத்திற்கொள்ளும் வகையில், செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு உயர்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
 
இதனை, உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றின் சான்றிதழை பெற்றுக்கொண்ட ஒருவருக்கான சந்தர்ப்பங்கள் உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என்பதை கண்டறியும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment