Monday, October 28, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்பினரும், புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் என்னை அரசியலிலிலிருந்து ஒதுக்க முயற்சித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் தொடர்ந்தும் அங்கம் வகிக்கின்றேனா இல்லையா என்பதே தெரிய
வில்லை. மன்னார் ஆயர் இதனை கூட்டமைப்பினரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என கோருகின்றேன்.
ஓராண்டுக்கு முன்னதாகவே அரசியல் களத்திலிருந்து என்னை வெளியேற்ற சில புலம்பெயர் சக்திகள் முயற்சி மேற்கொண்டன.
மாகாணசபைத் தேர்த்ல்களின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்கியது. இந்திய மாதிரியிலான சமஷ்டி முறைமையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment