Pages

Sunday, October 6, 2013

சட்டவிரோதமாக தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது:- கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தங்கம் கொள்ளை!

Sunday, October 06, 2013
இலங்கை::சட்டவிரோதமாக தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்ததாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறியுள்ளார்
சந்தேகநபர்கள் இருவரும் தலா 10 தங்கக் கட்டிகளை விழுங்கியுள்ளமை ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தங்கக் கட்டிகளை அவர்களது உடலில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
குறித்த இரண்டு இந்தியப் பிரஜைகளும் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தங்கம் கொள்ளை!
 
கட்டுநாயக்க பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட  ஒன்றரை கிலோகிராம் தங்கத்தை வேன் ஒன்றில் வந்த சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
 
வேனில் வந்த குழுவினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தங்கத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தங்கம் எடுத்துச் செல்லப்பட்ட காரை  வழிமறித்த சந்தேகநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட தங்கத்தின் பெறுமதி 75 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment