Wednesday, October 9, 2013

எங்களை இலங்கை கடற்படையினர் தாக்கவில்லை: சிறையில் உபசரிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் நெகிழ்ச்சி!

Wednesday, October 09, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் சோப்பு, பல்பொடி கொடுத்து உபசரித்தனர்' என, விடுதலையாகி ராமேஸ்வரம் வந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து அக்., 21ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படை கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை, நேற்று முன்தினம் மன்னார் கோர்ட் விடுவித்தது.
 
நேற்று மாலை, இந்திய, இலங்கை கடல் எல்லையில் நான்கு படகுகள் மற்றும் 20 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையிடம், இலங்கை கடற்படை ஒப்படைத்தது. இரவு 8.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்த மீனவர்களை, நேசக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் பாம்பன் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, மீனவர் சங்க தலைவர் அருளானந்தம், உறவினர்கள் வரவேற்றனர்.
 
மீனவர் கிஷ்சிங்கர் கூறியதாவது:
 
எங்களை இலங்கை கடற்படையினர் தாக்கவில்லை. மன்னாரில் எங்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் மாற்று உடை, பிரட் கொடுத்தனர். சிறையில் சோப்பு, பல்பொடி கொடுத்து நன்கு உபசரித்தனர். விரைவில் படகுகளுடன் விடுவிக்கப்படுவோம் என, கனவிலும் எதிர்பார்க்கவில்லை, என்றார்.

No comments:

Post a Comment