Pages

Thursday, October 17, 2013

வவுனியாவில் சிறார் இல்லம் மூடப்பட்டது!

Thursday, October 17, 2013
இலங்கை::வவுனியா – அட்டமஸ்கட பிரதேசத்தில் விஹாரையில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அட்டமஸ்கட சுதர்மாராம விஹாரையில் இந்த சிறுவர் இல்லம், விஹாராதிபதியின் பொறுப்பில் இயங்கி வந்தது. இந்தநிலையில் கடந்த 9 ஆம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவரச தொலை பேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது.
 
குறித்த சிறுவர் இல்லத்தின் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர் ஒருவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த முறைப்பாட்டை சிறுவர் அதிகார சபை உறுதி செய்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகார சபை சிறுவர்களை பொறுப்பேற்றுள்ளது.

No comments:

Post a Comment