Tuesday, October 29, 2013
சென்னை::இலங்கைத் தமிழர்கள் மீது தமிழ் நாடு காட்டும் கரிசனை அவர்களுடைய போட்டி அரசியல் நலன் சார்ந்தது. பாக்கு நீரினைக்கு குறுக்கே உதவி செய்யும் மனப்பான்மையை விட பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டித் தன்மையே காண முடிவதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த எகொனமிக்ஸ் டைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. கடந்த 26ம் திகதி வெளியான பத்திரிகையில் இந்த தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் நாடு, இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது போல் இக்கட்சிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன வேயொழிய வேறு எந்த உண்மையான நோக்கமும் கிடையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் காட்டும் இந்த போலி நடிப்பு இலங்கையின் சிறுபான்மை தமிழர்களது பிரச்சினைக்கு தீர்வுகாண உதவியாக அமையாத இந்நிலையில், இந்திய மத்திய அரசாங்க அவர்களது நடவடிக் கைகளை முன் உதாரணமாக கொள்ளல் ஆகாது. அதற்கு பதிலாக, பாதுகாப்பான நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கல் முறையை ஸ்தாபிப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழர்களின் வாக்குரிமையால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஆசிரியர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை நடத்தும் விதத்தினைக் கண்டித்து இந்திய மத்திய அரசாங்கம் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை பகிஷ்கரிக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளுமா? அல்லது பகிஷ்கரிக்குமா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே யுள்ளது.எவ்வாறாயினும், இலங்கை வடமாகாண சபைக்கென புதிதாக தெரிவு செய்யப்பட்டு ள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் சிந்தனை வித்தியாசமாகவுள்ளது.
இந்தியா, உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து புதுடில்லி தெளிவாக கருத்து வெளியிட வேண்டுமென்பதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்.இச்சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டு தலைவர்களின் கருத்துக்களை செவிமடுப்பதனை விடுத்து இலங்கைத் தலைவர்கள் கூறுவதற்கு செவி சாய்க்க வேண்டும்.கனேடிய அரசாங்கம் ஏதோவொரு உள்நோக்கம் காரணமாக உச்சி மாநாட்டினை பகிஷ்கரிக்கலாம். இருப்பினும் கொழும்பிலிருந்து வரக்கூடிய அழுத்தம் காரணமாக இந்நிலை பின்னர் மாற்றமடையலாம். ஆனால், இந்தியாவின் பகிஷ்கரிப்பு இதற்கு எதிர்மாறானது. இது இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு செய்யும் உதவியாகாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment