Pages

Wednesday, October 16, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று வேட்பாளர்கள் இன்று சத்தியப் பிரமாணம்!

Wednesday, October, 16, 2013
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று வேட்பாளர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
 
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை அடுத்து, மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப்  பிரதிநிதித்துவப்படுத்தி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா மற்றும் கலாநிதி எஸ்.சிவமோகன் ஆகியோர் வவுனியா சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்திரயப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 

No comments:

Post a Comment