Saturday, October 5, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும்: குணதாச அமரசேகர!

Saturday, October 05, 2013
இலங்கை::தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு செத்சிறிபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாணசபையில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மூலம் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டி;காட்டியுள்ளார். இந்த நிலைமையானது அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment