Wednesday, October 23, 2013
இலங்கை::இரண்டு சீன பிரமுகர்கள் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடையை நேற்று (ஒக்.22) வழங்கியுள்ளனர்.
இந் நன்கொடையை சீன தூதுவரின் மனைவி திருமதி. டிங் யாவ் மற்றும் திருமதி. சொங்டிங் லொ ஆகியோரால் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்களிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடாத்தப்பட்ட யுத்தத்தின் போது தாய் நாட்டிற்காக தம்மை தியாகம் செய்த போர் வீரர்களினதும் அவர்களது குடும்பத்தினரின் நன்மை கருதியும் சேவா வனிதா பிரிவானது பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment