Pages

Tuesday, October 8, 2013

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையில் தீவிர பிரச்சாரம்!

Tuesday, October 08, 2013
இலங்கை::சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையில் தீவிர பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்நோக்கக் கூடிய ஆபத்துக்களை விபரிக்கும் வகையிலான துண்டுப் பிரசூரங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வீதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
உள்நாட்டு பிரச்சார நிறுவனங்களை பயன்படுத்தி இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அண்மையில் சிங்கள தமிழ் மொழிகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் குறித்து விபரிக்கும் துண்டு பிரசூரங்கள் நீர்கொழும்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
 
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுப் பயணங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை அவுஸ்திரேலியா தீவிரப்படுத்தியுள்ளது. இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுப் பயணங்களை  தடுத்து நிறுத்தும் அவுஸ்திரேலியாவின் முயற்சிக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
யுத்த நிறைவினைத் தொடர்ந்து திட்டமிட்ட அடிப்படையிலான பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment