Pages

Monday, October 21, 2013

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது!

Monday, October 21, 2013
இலங்கை::புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
புலிகளின்  மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டுமென அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர். பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ரீ.யோகராசா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமது கட்சி ஆதரளிக்காது என கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றுமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சாவகச்சேரி பிரதேச சபையின் சுயாதீன தீர்மானகவே இந்தத் தீர்மானத்தை கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம் போன்ற காரணிகளுக்கே மு
க்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment