Pages

Sunday, October 6, 2013

இலங்கை கடல் பகுதிக்குள் வராதீர்கள்: ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடல் படை!

Sunday, October 06, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் ஒரு பகுதி மீனவர்கள், தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் போட்டனர்.

இலங்கை கடல் பகுதிக்குள் வராதீர்கள் என்று மிரட்டி மீனவர்களை விரட்டி அடித்தனர். அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர் பெனிட்டோ என்பவரின் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதினர்.இதில் படகின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இலங்கை கடற்படையினரின் இச்செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் பயத்தில் அங்கிருந்து திரும்பி வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன்பிடித்து திரும்பினர். இதனால் இன்று காலை கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் மீன்பாடு குறைவாக இருந்தது.

பெனிட்டோ படகில் சென்ற மீனவர்கள் வியாகுலம், லெட்சுமணன், சிங்கம் ஆகியோர் கூறியதாவது: வழக்கம் போல் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தோம். அங்கு கப்பலில் வேகமாக வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகின் மீது மோதினர். இதில் படகின் முன்பகுதி உடைந்துவிட்டது. கடற்படையினர் அங்கிருந்து சென்றவுடன் நாங்கள் படகை திருப்பி கொண்டு ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்துவிட்டோம். படகின் சேதமடைந்த பகுதியை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். இச்சம்பவம் குறித்து மீன்துறை மற்றும் புலனாய்வு துறையினர் வி
சாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment