Wednesday, October, 16, 2013
பீஜிங்::சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் உள்ள குளியல் அறைகளை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மக்கள் ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் போன்ற சமூக இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை காரசாரமாக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பீஜிங் எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த யூ ஹோ கூறுகையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் உள்ள பாத்ரூமில் குளிப்பதால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களுக்கு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதுÕ என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பில்லாத உறவின் போது தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. இது தொற்று நோய் அல்ல. இது போன்று பொது இடங்களில் உள்ள குளியல் அறையை பயன்படுத்த தடை விதிப்பது மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். இது சட்ட விரோதமானது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு பன்னாட்டு எய்ட்ஸ் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment