Tuesday, October 15, 2013

பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்!

Tuesday,15, October, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என வலியுறுத்தி மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட 11 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
 
இதனையடுத்தே அவர் இன்று முற்பகல் 9.15 அளவில் மாத்தறை காவற்துறை நிலையத்தில் சரணடைந்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்!
 
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை
தீர்க்கும் முகமாக  கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது

கட்சியின் பொறுப்புக்களை மேற்கொள்ளும்; முகமாக அமைக்கப்படவுள்ள தலைமை குழு தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது

ஏற்கனவே இந்த கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்தது

எனினும் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கையின் அடிப்படையில் அது பிற்போடப்பட்டது

No comments:

Post a Comment