Pages

Monday, October 7, 2013

புலிகள் மீதான இலங்கையின் வெற்றியையடுத்து கற்றுக் கொள்ளக்கூடியவை!

Monday, October, 07 ,2013
இலங்கை::பாகிஸ்தான், செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ளது. இதே வேளை சிறிய நாடான இலங்கை அரசு 27 வருட காலமாக புலிகளுடன் யுத்தம் புரிந்து இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி புலி கிளர்ச்சியாளர்களை முழுமையாக வெற்றி கொண்டது. இதிலிருந்து பாகிஸ்தான் சில விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை பாகிஸ்தானிய பத்திரிகை ஆக்கமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
யுத்தத்துக்கு பிந்திய காலப்பகுதியில், புலிகளினால் மனிதக் கேடயங்களாகவும் பேரம் பேசும் பொருளாகவும் இருந்து உள்ளூரில் இடம் பெயர்ந்த சுமார் 300,000 மக்களின் நலன்களை பேணுவது கடினமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அப்பத்திரிகையில் எழுத்தாளர் சபீர் சாஹ் குறிப்பிடும் போது இலங்கை அரசானது இம்மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் புனரமைப்பு, புனர்வாழ்வு,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு,மீள் 
ஒருங்கிணைப்பு,நல்லிணக்கம் போன்றவற்றை ஆரம்பிக்க உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் புலிகளுடனான மோதல் பிரதேசத்தை யுத்த சூனிய வலயமாக பிரகடணப்படுத்தியமை ஆய்வுகளிலிருந்து அறியப்படுகின்றது. இது போன்றல்லாது பாகிஸ்தானிய பிரதேசங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்காவினால் நிகழ்த்தப்படும் தாக்குதலானது கவலைக்குறிய விடயமாகும்.
 
யுத்த காலங்களின் போது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலிருந்து தப்பியோடும் பொதுமக்களை புலிகள் கனரக ஆயுதங்கள் உட்பட அனைத்து விதமான ஆயுதங்களைக் கொண்டும் பொதுமக்களைத் தாக்கினர். அதுமாத்திரமன்று தற்கொலைத்தாக்குதல் மூலமும் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் மக்களை தாக்கினர்.
 
பொதுமக்கள் மீதான இவ்வாறான தற்கொலைத் தாக்குதல்கள் ஒரு காலத்தில் தமது இலக்கை அடையும் பொருட்டு தொடராக இலங்கை இராணுவத்தினர்மீது நடத்தப்பட்டமை குறிப்பிடப் படவேண்டிய விடயமாகும்.
இதில் மகிழ்ச்சியானதும் உண்மையானதுமான விடயம் என்னவென்றால் 2006ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 5.5பில்லியன் அமேரிக்க டொலர்களை மாத்திரமே செலவிட்டுள்ளது என்பதாகும்.

No comments:

Post a Comment