Tuesday, October 22, 2013

கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை மீண்டும் மீளாவுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

 
Tuesday, October 22, 2013
இலங்கை::கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை மீண்டும் மீளாவுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கெசினோ சூதாட்ட மையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை முன்வைக்க தீர்மானித்திருந்தது.
இதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி கெசினோ சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது.
எவ்வாறாயினும், மூலோபாய அபிவிருத்தி சட்டமூலம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் சரியான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சட்டமூலத்தை வர்த்தமானியிலும் வெளியிடவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தெரிவித்துள்ளன.
இதனிடையே, அரசாங்கத்தினால் கெசினோ வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படாமை தற்காலிக நடவடிக்கை என்று ஜே.வி.பியினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, இது மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்று தெரிவித்தார்.

தீக்கோழி மணலுக்குள் தனது தலையை புதைத்துக் கொண்டு உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டதாக நினைத்துக்கொள்ளும். அரசாங்கம் தற்போதும் அதேபோன்ற செயற்பாட்டையே மேற்கொள்கிறது.
கெசினோ வரி தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக மறைத்துக்கொண்டு, கெசினோவை ஒழித்துவிட்டதாக நாட்டில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறது.

No comments:

Post a Comment