Pages

Wednesday, October 16, 2013

ராமேஸ்வரத்திற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வருகை: தமிழக மீனவர்கள் விரைவில் வீடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை!

Wednesday, October, 16, 2013
ராமேஸ்வரம்:.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வீடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய இணைஅமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது, இருநாட்டு மீனவர்களுக்கும் இடையிலேயான பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காணமுடியும்.ஆனால் இது குறித்து தீர்வு காண்பதற்க்கு  தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 

மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தனது தம்பியின் நினைவாக திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார்.  ஏற்கனவே இலங்கை, இந்திய மீனவர்களிடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த மீனவர் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment