Saturday, October 05, 2013
இலங்கை::இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் 70 பேர் இருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் காப்பற்றப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு நோக்கி பயணித்து கொண்டிருந்தனர்.
இடையில் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக படகு நடு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்
சம்பவம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து கடற்படையின் சாகர கப்பலில் அங்கு சென்ற கடற்படையினர் அதில் இருந்தவர்களை காப்பற்றியுள்ளனர்.
படகில் இருந்தவர்களில் 13 சிறுவர்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் இலங்கையின் கல்பிட்டி பிரதேசத்தில் இருந்து கடந்த 26ம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் நேற்று மாலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.






No comments:
Post a Comment