Friday, October 18, 2013

சிறைச்சாலைகளிலும், வெளியிடங்களிலும் பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் 500 ரூபாவாக அதிகரிப்பு!

Friday, October 18, 2013
இலங்கை::சிறைச்சாலைகளிலும், வெளியிடங்களிலும் பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் கைதிகளுக்கு நாளாந்தப் பணிகளுக்காக 300 ரூபா ஊதியம் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி குலதுங்க தெரிவித்துள்ளார்.
 
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தீர்மானத்திற்கு அமையவும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமையவும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
இதற்கமைய, கைதியொருவருக்கு எதிர்வரும் காலங்களில் நாளாந்த பணிகளுக்கு 500 ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment