Monday, October 28, 2013
பாட்னா::பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி பேசவிருந்த மைதானம் உள்பட இரண்டு இடங்களில் தொடர்குண்டுவெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபை தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடக்கவுள்ளது. இதனையொட்டி பாரதிய ஜனதா பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பிரசாரம் செய்து கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெறவிருந்த பாரதிய ஜனதா மைதானத்தில் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாக நகரின் ரயில் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுரைக்கு பக்கத்தில் பெட்ரோல் குண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
உடனே வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களும் வரைவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது கழிவுரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டு அவைகள் செயல் இழக்கச்செய்யப்பட்டன. இதனையடுத்து நரேந்திர மோடி பேசவிருந்த மைதானத்தில் தொடர் குண்டுகள் வெடித்தன. மைதானத்திற்கு மோடி வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த குண்டுகள் வெடித்தன. மொத்தம் 6 குண்டுகள் வெடித்தன. இதில் 4 குண்டுகள் சக்திகுறைந்தவைகள். மைதானத்தையொட்டி வெளியே இந்த குண்டுகள் வெடித்தன என்று போலீசார் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மைதானம் முழுவதும் பதட்டம் நிலவியது. மைதானத்தில் குண்டுவெடிக்கும் பல மணி நேரத்திற்கு முன்புதான் ரயில்நிலையத்தில் குண்டுவெடித்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் கழிவறையில் இருந்து கைப்பற்றபட்ட குண்டை செயல் இழக்க செய்தபோது குண்டு வெடித்ததில் நிபுணர் ஒருவர் படுகாயம் அடைந்தார் என்று ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடித்தபோது புகை கிளம்பியது. மைதானம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக இருந்தது. பேரணியில் மோடி கலந்துகொண்டு பேசும்போதுகூட புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அறிக்கை அனுப்புமாறு பீகார் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் நிதீஷ்குமாரை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பீகார் மாநில அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். தேவையான உதவிகளை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளோம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். குண்டுவெடிப்பு குறித்து அதிக தகவல்களை அறிய முயற்சி செய்து வருகிறோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தேவைப்பட்டால் கூடுதல் படையை அனுப்பவும் தயார் சிங் மேலும் கூறினார்.
வெடித்த குண்டுகளின் சக்தி அளவு, இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்,தீவிரவாத இயக்கங்கள், சட்ட ஒழுங்கு நிலைமை ஆகியவைகள் குறித்து அறிக்கை அனுப்பும்படி மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெடித்த குண்டுகளின் தன்மையை அறிய தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் வெடிகுண்டு நிபுணர்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாட்னா ரயில் நிலைய அதிகாரி ராஜூ குமார் கூறுகையில் பாரதிய ஜனதா பேரணியில் கலந்துகொள்வதற்காக 7 ரயில்களில் தொண்டர்கள் வந்தனர். இவர்கள் குண்டுவெடிப்பதற்கு முன்பே வந்துவிட்டதால் பெரும் விபரீதம் தடுக்கப்பட்டுவிட்டது என்றார். பாட்னா ரயில்நிலையம் உள்பட நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பாட்னா நகர போலீஸ் அதிகாரி ஜெய்காந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளத்துடன் மோதல் இருப்பதால் இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது பாரதிய ஜனதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி அந்த கட்சி கோரியுள்ளது. இந்த குண்டுவெடிப்பானது மோடி பேரணியில் இளைஞர்கள் கலந்துகொள்வதை தடுத்து நிறுத்தவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சியில் இருந்தும் மக்கள் விலக விரும்புகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை அறிய விரைவான, விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நக்வி மேலும் கூறினார்.
அதேசமயத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சபீர் அலி கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகிய பிறகு குண்டுவெடித்திருப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிய வேண்டும் என்றும் சபீர் அலி கூறியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பமானது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சியை பிடிப்பதற்காக நாட்டை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் அலி மேலும் கூறினார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி காக்கும்படியும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் மாநில முதல்வர் நதீஷ் குமாரை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தெரிந்தவுடன் முதல்வர் நிதீஷ்குமாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மன்மோகன் சிங், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment