Wednesday, October 16, 2013

கதிர்காமம் - புத்தளம் வீதியின் 43 ஆம் கட்டைப் பகுதியில் கஞ்சா மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது!

Wednesday, October, 16, 2013
இலங்கை::கதிர்காமம் - புத்தளம் வீதியின் 43 ஆம் கட்டைப் பகுதியில் கஞ்சா மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 12 கிலோகிராம் கஞ்சா போதைபொருளும், தோட்டாக்கள் மற்றும் சிறியரக குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..

 

No comments:

Post a Comment