Tuesday,15, October, 2013
ராமேசுவரம்::கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை நேற்று நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனால், ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மாலையில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஜோசப், ஜேம்ஸ், சேசுஅடிமை, சார்லஸ், செல்வராஜ் ஆகியோரின் 5 படகுகளையும், படகுகளில் இருந்த மணிகண்டன், சக்திவேல், முருகன், ராஜ் உட்பட 22 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து இரவு முழுவதும் விசாரணை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், இன்று காலை 22 மீனவர்களையும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், 22 மீனவர்களையும் இன்று மாலைக்குள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுவத்தீவூ அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது 4 விசைபடகுகளில் இருந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். உடனே மற்ற மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பினர். அவர்கள் இன்று மாலை கரை திரும்புவார்கள் என தெரிகிறது.
அவர்கள் வந்த பின்பே எத்தனை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர் என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இன்று காலை இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த 19 மீனவர்களும் ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று மட்டும் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்த 41 தமிழக மீனவர்களும், 9 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்த 26 இலங்கை மீனவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் சிறைபிடித்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக தற்போது தமிழக மீனவர்கள் 41 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைப்பிடித்துள்ளனர் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையினால் அச்சமடைந்த மீனவர்கள் நேற்று இரவு முழுவதும் மீன் பிடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் குறைந்த அளவே மீன்பாடு இருந்தது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குறித்து மீன்வளத் துறை மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment